×

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டர்போல் போலீசை நாட முடிவு


சென்னை: சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க இன்டர்போல் போலீசின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஒரு வெடி குண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் இது வெறும் புரளி எனதெரியவந்தது.

இருப்பினும் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து 13 தனியார் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்த மர்மநபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என்று சென்னை போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீசை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டர்போல் போலீசை நாட முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Interpol police ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...